முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கும் மைத்திரியின் மகன்!

Reha
4 years ago
முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கும் மைத்திரியின் மகன்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேன திடீரென அரசியலுக்குள் பிரவேசித்து தற்போது மற்றுமொரு அதிரடி நடவடிக்கைக்கு குதித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்நிலையில் அவர் வருகின்ற வருடம் முதற்காலாண்டில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற மாகாணசபைத் தேர்தலில் வடமத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கவுள்ளார் என்று தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.

வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியாகப் போட்டியிடுவது பற்றி இறுதிக்கட்டப் பேச்சில் முடிவெடுக்கப்பட்டது.

அந்த வகையில் தஹம் சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக இறங்குவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4