மட்டக்களப்பில் அடித்து கொலை செய்யப்பட்ட நபர்: சந்தேகத்தில் நண்பன் கைது  

Prathees
4 years ago
மட்டக்களப்பில் அடித்து கொலை செய்யப்பட்ட நபர்: சந்தேகத்தில் நண்பன் கைது  

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் சடலமாக இன்று (19) மீட்கப்பட்டடுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரப்பாலம் முள்ளிச்சேனையைச் சேர்ந்த 56 வயதுடைய கிருஷ்ணபிள்ளை நேசராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் உயிரிழந்தவரின் நண்பன் ஒருவரை கைது செய்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரும் அவருடைய நண்பனும் சம்பவதினமான நேற்று (18) இரவு வீட்டிற்கு அருகாமையிலுள்ள தோட்டம் ஒன்றில் உள்ள வாடியில் மதுபானத்துடன் சென்று மது அருந்தியுள்ளனர்.

இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நண்பனை தாக்கியதாகவும் அதனையடுத்து தான் அங்கிருந்து தப்பி ஓடி காட்டில் ஒளிந்திருந்ததாகவும் கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4