இலங்கை கடற்படையின் படகு மோதியதில் தமிழக மீனவர் ஒருவர் மாயம்

#Fisherman #India
Prathees
4 years ago
இலங்கை கடற்படையின் படகு மோதியதில் தமிழக மீனவர் ஒருவர் மாயம்

இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல் மோதியதில் இந்தியாவின் கோட்டைபட்டினத்தைச் சேர்ந்த மீனவர் காணாமல்போயுள்ளார்.

இந்திய மீனவர்களின் படகு ஒன்று காரைநகர் கோவலம் கடற்பரப்பிற்குள் உள்நுழைந்த சமயம் அதனை கடற்படையினர் விரட்ட முற்பட்டபோது விபத்திற்குள்ளாகியுள்ளது. 

இதன்போது, கடற்படையினரின் கப்பல் மோதியதில் இந்திய மீனவர்களின் படகு கடலில் மூழ்கியுள்ளது. இவ்வாறு மூழ்கிய படகில் ராஜ்கீரன், சுகந்தன், சேவியர் ஆகியோர் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 

இவர்களில் சுகந்தன், சேவியர் ஆகிய மீனவர்களை கடற்படையினர் காப்பாற்றி காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளனர். 

இதேநேரம் காணாமற்போன ராஜ்கீரனை இரவிரவாக இன்று அதிகாலைவரை தேடுதலில் ஈடுபட்டபோதும் அவரை இதுவரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4