பழைய பாலத்தின் மீது விழுந்த பதுளை பாராளுமன்ற உறுப்பினர்

#Badulla
Prathees
2 years ago
பழைய பாலத்தின் மீது விழுந்த பதுளை பாராளுமன்ற உறுப்பினர்

ஹாலீலா ஹலாப பகுதியில் உள்ள  பழைய பாலத்தினைப் பார்வையிட  நேற்று முன்தினம் சென்ற பாராளுமன்ற உறுப்பினரும் பதுளை மாவட்ட ஒருஙிகிணைப்புக் குழுவின் தலைவருமான டிலான் பெரேரா குறித்த பாலத்தின் பலகை உடைந்ததில் தடுக்கி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உமா ஓயாவின் குறுக்கே ஹாலீ எல மற்றும் ஊவா பரணகம பிரதேச செயலகங்களை இணைக்கும் இந்த பாலம் 'ஹலாப இரும்பு பாலம்' என்று அழைக்கப்படுகிறது.

இந்த பாலம் 1867 இல் கட்டப்பட்டது மற்றும் 1919 இல் புதுப்பிக்கப்பட்டது.இந்த பாலம் சுமார் 300 அடி நீளமானது மற்றும் முழு இரும்பு சட்டங்களால் கீழே ஸ்லீப்பர் பலகைகளுடன் கட்டப்பட்டுள்ளது. சமீப காலங்களில் சிறிய பழுதுகள் செய்யப்பட்டிருந்தாலும்இ பெரும்பாலான பலகைகள் இப்போது பழுதடைந்த நிலையில் உள்ளன.

அவர் பாலத்தின் மீது நடந்து சென்றபோது  சிதைவடைந்த பலகை உடைந்து பாலத்தில் விழுந்துள்ளார். இதன்போது அவருக்கு சிறிய காணம் ஏற்பட்டதாகவும் பாரிய காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாமிக புத்ததாச மற்றும் பலர்  அவருடன் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!