வாகனதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Reha
4 years ago
வாகனதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

நாட்டில் நாளாந்தம் பொருட்களின் விலைகள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில் எரிபொருட்களின் விலைகளையும் அதிகரிக்குமாறு எரிசக்தி அமைச்சு மற்றும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் ஆகியன நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தன.

எனினும் விலை அதிகரிப்புக்கான வேண்டுகோளை நிதியமைச்சு நிராகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

விலைகளை அதிகரிக்காவிட்டால் அதிகாரிகள் வேறு வகையான தீர்வொன்றை முன்வைப்பார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தலையீட்டின் மூலம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் நஸ்டத்தினை ஈடுசெய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடப்போவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4