பசு வதையை தடை செய்யும் சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி

#Ramesh Pathirana
Prathees
4 years ago
பசு வதையை தடை செய்யும் சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி

இலங்கையில் மாடு அறுத்தலை தடை செய்யவும் மற்றும் அதற்கான சட்ட வரையறைகளை நடைமுறைப்படுத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று (18) மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பசு வதையை தடை செய்வது தொடர்பான திருத்தச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும்இ பின்னர் அதனை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4