சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் சாதனை படைத்த யாழ்.மாணவர்கள்!

Reha
4 years ago
சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் சாதனை படைத்த யாழ்.மாணவர்கள்!

இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் தேசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகளின் 2ஆம் கட்டமாக வடக்கு வலயத்திற்கான மேஜர் சுற்றுப்போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

இப்போட்டிகளில் திறந்த பிரிவில் கொக்குவில் இந்துக் கல்லாரியைச் சேர்ந்த சிவதனுஜன் (Sivathanusan) முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

7 சுற்றுக்களை கொண்ட இச் சுற்றுப்போட்டியில் 6 வெற்றிகள் மற்றும் 1 Draw உள்ளடங்கலாக 6 1/2 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

அத்துடன் 2ஆவது இடத்தை யாழ்.இந்துக் கல்லூரியை சேர்ந்த ஆர்த்திகன் (Arthikan) 2ஆவது இடத்தையும் 3ஆவது இடத்தை யாழ் இந்துக் கல்லூரியை சேர்ந்த ஆருத்திரன் (Aruththran) பெற்றுக்கொண்டனர்.

பெண்கள் பிரிவுப் போட்டிகளில் யாழ்.வேம்படி பெண்கள் பாடசாலையை சேர்ந்த திஷானுகா (Dhinuka) முதலிடத்தைப்பெற்று கொண்டார்.

7 சுற்றுக்களில் 6 போட்டிகளில் வெற்றிபெற்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றார். அத்துடன் யாழ் வேம்படி பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த நர்த்தவி (Narththavi) மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4