48 தங்க பிஸ்கட்களுடன் இளைஞன் கைது

#Arrest #Airport
Prathees
4 years ago
48 தங்க பிஸ்கட்களுடன் இளைஞன் கைது

தனது உடலில் தங்க பிஸ்கட்களை மறைத்து வைத்துக் கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வௌியேற முற்பட்ட இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று  அதிகாலை 2 மணியளவில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமான நிலைய துப்பரவு செய்யும் பிரிவில் கடமையாற்றும் 25 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞனிடம் இருந்து 4,848 கிராம் நிறையுடைய 48 தங்க பிஸ்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தங்க பிஸ்கட்கள் சுமார 7 கோடி ரூபா பெறுமதியுடையவை என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தங்க பிஸ்கட் தொகை அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4