மன்னாரில் கேரள கஞ்சா பொதிகளுடன் பெண் ஒருவர் கைது

#Mannar #Arrest
Prathees
4 years ago
மன்னாரில் கேரள கஞ்சா பொதிகளுடன் பெண் ஒருவர் கைது

மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில்  சுமார் 20 கிலோ 215 கிராம் கேரள கஞ்சா பொதிகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேசாலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று இரவு  குறித்த பகுதிக்குச் சென்ற பொலிஸார்,  கேரள கஞ்சா பொதிகளை மீட்டுள்ளதோடு, சந்தேக நபரான பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

பேசாலை 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி கைது செய்யப்பட்ட பெண் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சாஇ மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த  நடவடிக்கைஎடுத்துள்ளதாக பேசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4