பிரான்சில், மிஸ். பிரான்ஸ் அழகிப்போட்டி நடத்திய அமைப்பின் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 

#world_news #France
பிரான்சில், மிஸ். பிரான்ஸ் அழகிப்போட்டி நடத்திய அமைப்பின் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 

பிரான்சில் பிஸ். பிரான்ஸ் போட்டி நடத்திய நிறுவனம், எண்டெமோள் தயாரிப்பு நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் மீது பிரான்ஸ் பெண்ணிய அமைப்பு ஒன்றும், அழகிப்போட்டியில் தோற்ற மூன்று போட்டியாளர்களும் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

அழகிகளைத் தேர்வு செய்யும்போது, அவர்கள் 5.58 அடி உயரம் இருக்கவேண்டும், திருமணமாகியிருக்கக்கூடாது, அழகின் பிரதிநிதியாக இருக்கவேண்டும் என்ற விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.

ஆனால், பிரான்ஸ் தொழிலாளர் சட்டத்தின்படி, நிறுவனங்கள் பணிக்காக ஆட்களைத் தேர்வு செய்யும்போது, நன்னடத்தை, வயது, குடும்ப அந்தஸ்து அல்லது தோற்றத்தின் அடிப்படையில் பாரபட்சம் காட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.
பாரீஸ் புறநகர் பகுதியான Bobigny என்ற இடத்திலுள்ள தொழிலாளர் நல நீதிமன்றம் ஒன்றில் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில், அழகிப்போட்டியில் பங்கேற்போரை நீதிபதிகள் தொழிலாளர்கள் என அங்கீகரிப்பர்களா என்பது கேள்விக்குறியே.

ஆனாலும், 2013ஆம் ஆண்டு இதேபோல் மிஸ்டர் பிரான்ஸ் போட்டியில் பங்கேற்ற ஒருவருக்கு ஆதரவாக வழங்கப்பட்ட தீர்ப்பைச் சுட்டிக்காட்டி இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4