போதை பழக்கத்துக்கு அடிமையாக இருப்பவர்களை, மொட்டையடித்து 45 நாட்கள் சிகிச்சையில் அனுமதிக்கும் தலிபான்.!

Keerthi
4 years ago
போதை பழக்கத்துக்கு அடிமையாக இருப்பவர்களை, மொட்டையடித்து 45 நாட்கள் சிகிச்சையில் அனுமதிக்கும் தலிபான்.!

போதைப்பழக்கத்திற்கு அடிமையாகும் நபர்களை முகாம்களுக்கு அழைத்து சென்று மொட்டையடித்து எச்சரிக்கை செய்கிறது தலிபான் அமைப்பு என ஆப்கான் செய்தி நிறுவங்களின் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் நாங்கள் அதிகாரத்தை கைப்பற்றி, அதனை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்வோம் என தலிபான் பயங்கரவாதிகள் அறிவித்து ஆட்சியை கைப்பற்றினர். ஆயுதம் ஏந்தி போராடி, இறுதியில் அமெரிக்க படைகளின் விலகளுக்கு பின்னர் தலிபான்கள் வசம் 20 வருடம் கழித்து ஆட்சி அதிகாரம் சென்றது.

ஆட்சியை தலிபான்கள் தனியாக கைப்பற்றுவார்கள் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், அவர்களுக்கு உதவியாக பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வந்தது அம்பலமானது. இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையில் ஐ.எஸ். Vs தலிபான்கள் என்ற பிரச்சனை ஏற்பட்டு மோதல் முற்றியது.

அதிகார பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கிய சில நாட்களுக்கு உள்ளாகவே ஐ.எஸ்.கே பயங்கரவாத அமைப்பு தலிபான் அமைப்பினரை குண்டு வைத்து கொடூர கொலை செய்தனர். இதனால் அங்கு நிலையற்ற தன்மை உருவாக தொடங்கியது. மேலும், மக்களும் உணவு, பணம் என பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானை கைப்பற்ற தாலிபான்களுக்கு நேரடி, மறைமுக உதவி செய்த சில நாடுகளும், அதன் வருவாய்க்கு உதவி செய்யாமல் இறுதியில் கைவிட்டது. இதுபோதாதென, தற்போது ஷியா முஸ்லீம் Vs சன்னி முஸ்லீம் பிரச்சனையில், மசூதிகளில் குண்டு வைத்து மக்கள் பலியாகும் சோகம் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் போதைக்கு அடிமையான நபர்களை கைது செய்து முகாம்களுக்கு அழைத்து செல்லும் தலிபான்கள், அவருக்கு மொட்டையடித்து 45 நாட்களில் போதைப்பழக்கத்தை கைவிட வேண்டும், இல்லையேல் சிறையில் அடைக்கப்படுவீர்கள் என எச்சரித்து தங்க வைத்துள்ளது. இதுதொடர்பான செய்திகள் உள்ளூர் ஊடகங்கள் வாயிலாக வெளியுலகுக்கு தெரியவந்துள்ளது.

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4