குழந்தைகள் தவறு செய்தால் பெற்றோருக்கு தண்டனை-சீனா அறிவிப்பு

Keerthi
4 years ago
குழந்தைகள் தவறு செய்தால் பெற்றோருக்கு தண்டனை-சீனா அறிவிப்பு

இன்றைய காலக்கட்டத்தில் சிறுவர்களும் வன்முறை, குற்றச்செயல்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். சிலர் தவறான நடத்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை தடுப்பது பெற்றோரின் கடமை தலையாயது. எனினும் சிறுவர்களின் தவறான நடத்தைகள் குறைந்தப்பாடு இல்லை.

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இந்த சூழல் நீடிக்கிறது. இந்த நிலையில், குழந்தைகளின் தவறான நடத்தை அல்லது குற்ற செயல்களுக்கு பெற்றோருக்கு தண்டனை வழங்கும் வகையில் சட்டம் கொண்டு வர சீனா திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக சீனாவில் குடும்பக் கல்வி ஊக்குவிப்புச் சட்டம் என்ற வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

அதில், குழந்தைகளின் தவறான நடத்தைகளுக்கு பெற்றோரை பொறுப்பாக்குவதுடன் குழந்தை வளர்ப்பு பற்றிய வகுப்புகளுக்கும் அவர்கள் அனுப்பி வைக்கப்படுவர். பெற்றோர் மட்டுமல்லாமல் குழந்தைகளின் பாதுகாவலருக்கும் இச்சட்டம் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக, விரைவில் நாடாளுமன்ற நிலைக்குழு இந்த சட்ட முன்வடிவை ஆய்வுசெய்ய உள்ளது. குறிப்பாக பெற்றோர் குழந்தைகளிடம் நேரத்தை செலவிட வேண்டும், விளையாட வேண்டும், உடற்பயிற்சி செய்தல் உள்ளிட்ட நற்செயல்களில் ஈடுபட வேண்டும் என்றும் இந்த சட்டம் பரிந்துரைக்கிறது.

சீனாவில், சிறுவர்கள் வார இறுதி நாட்களான வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாட வேண்டும் என்று சமீபத்தில்தான் சீன கல்வித்துறை அமைச்சகம் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. அதேபோல், வீட்டுப்பாடங்கள் மற்றும் வார இறுதி நாட்கள், விடுமுறை தினங்களில் பள்ளி முடிந்த பிறகான பயிற்சி வகுப்புகள் நடத்தவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மாணவர்களின் கல்விச்சுமையை குறைக்கும் வகையில் சீன அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்திருந்தது.

தற்போது குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையில் சீனா புதிய திட்டத்தை கொண்டுவர உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4