மனித நடமாட்டம் இல்லா பகுதியில் தண்ணீர் இன்றி ஒரு வாரமாக தவித்த இருவர் மீட்பு

#Australia
Prasu
4 years ago
மனித நடமாட்டம் இல்லா பகுதியில் தண்ணீர் இன்றி ஒரு வாரமாக தவித்த இருவர் மீட்பு

ஆஸ்திரேலியாவில் காணாமல் போன இருவர் , ஒரு வாரமாக தண்ணீர் கூட கிடைக்காத நிலையிலும் உயிர் பிழைத்து வந்துள்ளனர்.

14 வயதான மகேஷ் பேட்ரிக் மற்றும் 21 வயதான ஷாஹுன் ஆகிய இருவரும் ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் காரில் சென்ற போது , மனித நடமாட்டமே இல்லாத பகுதியில் காணாமல் போயினர். குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் ஒரு வாரமாக காவல்துறையினர் அவர்களை தேடினர். இந்நிலையில் இருவரும் மீட்கப்பட்டுள்ளனர்.

கார் பழுதானதால் அங்கிருந்து நடக்கத் தொடங்கி இருவரும் வெவ்வேறு பாதையில் சென்றுள்ளனர். நெடுஞ்சாலையை நோக்கிச் செல்வதற்கு பதிலாக தவறான பாதையில் சென்றதும் பின்பு தண்ணீர் தேடி பல கிலோமீட்டர் அலைந்ததும் தெரிய வந்துள்ளது.ஒரு வாரம் ஆன போதிலும் இருவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4