நாளை முதல் பாடசாலைக்கு செல்லாத ஆசிரியர்கள் - அதிபர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது!

#Sri Lanka Teachers
Prathees
2 years ago
நாளை முதல் பாடசாலைக்கு செல்லாத ஆசிரியர்கள் - அதிபர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது!

கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் நாளை (21) முதல் நான்கு கட்டங்களாக மீண்டும் திறக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் நாளை 21 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பிறகு வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் நவம்பர் மாத சம்பளம் நிறுத்தப்படும் என்று ஊவா மாகாண ஆளுநர்  ராஜா கொள்ளூரே தெரிவித்துள்ளார்.

"ஆளுநராக கல்வி அமைச்சரின் அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு பொறுப்பான நபர் என்ற முறையில்இ பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிரியர் மற்றும் அதிபர்களின் நவம்பர் மாத சம்பளத்தை இடைநிறுத்தவும் 25 ஆம் திகதி வரும் எவருக்கும் எதிராக நான் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளேன். அவர்கள் பள்ளிக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு காணக் கோரி, ஒன்லைன் கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகுவதற்காக, ஆசிரியர் அதிபர்கள் சங்கம் (GPA) தொடங்கிய வேலைநிறுத்தத்தின் 100 வது நாள் இன்று ஆகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!