மூன்று மனைவிமாரைப் பராமரிக்க சீனருக்கு கசிப்பு விற்ற நபர்

#Arrest #Police
Prathees
4 years ago
மூன்று மனைவிமாரைப் பராமரிக்க சீனருக்கு கசிப்பு விற்ற நபர்

மூன்று மனைவிகளை பராமரிப்பதற்காக மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் சீனருக்கு கசிப்பு விற்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் மீரிகம -கணேகொட அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரியும் சீன நாட்டவர்களுக்கு கசிப்பு விற்பனை செய்வது தொடர்பாக தகவல் வெளியானதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதனையடுத்து,  மேற்கு மாகாண புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் பல்லவல பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் நீண்ட காலமாக கசிப்பு விநியோகத் தொழிலை நடத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட போது சந்தேக நபரின்  மோட்டார் சைக்கிளுக்கு முன்னால் கசிப்பு பாக்கெட்டுகள் மற்றும் போத்தல்கள் மற்றும் கசிப்பு கேனையும் பொலிசார் கைப்பற்றினர்.

மூன்று மனைவிமாரைப் பராமரிக்க ஒரு நாளுக்கு அதிக பணம் தேவைப்படுவதாகவும் இந்த வியாபாரத்தின் மூலம் ஒரு நாளைக்கு சுமார் ரூ .20000 சம்பாதிப்பதாகவும் அவர் பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4