அவசர பாஸ்போர்ட் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

#Colombo
Prathees
4 years ago
அவசர பாஸ்போர்ட் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்ல தலைமை அலுவலகத்தில் கடந்த 10 நாட்களில், ஒரு நாள் சேவையில்  மட்டும் 12,158 பேர்  பாஸ்போர்ட் பெற்றுள்ளனர் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சாதாரணமாக  ஒரு நாள் சேவைக்கு ஒரு நாளில் சுமார் ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தாலும் அண்மைய நாட்களில் இந்த எண்ணிக்கை 1,500 ஐ தாண்டியதாக அந்த அதிகாரி கூறினார்.

அதன்படி, ஒரு நாள் சேவையிலிருந்து பாஸ்போர்ட் பெறுவது 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக அவர் அவர் குறிப்பிட்டார்.

சாதாரண சேவையில்  கடந்த 10 நாட்களில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

மாத்தறை, கண்டி, வவுனியா மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்களில் இருந்து குறித்த விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4