மீண்டும் அதிகரித்த அரிசி விலை - வெளியான விலைப் பட்டியல்

Reha
4 years ago
மீண்டும் அதிகரித்த அரிசி விலை - வெளியான விலைப் பட்டியல்

அரிசி விலைகள் அதிகரித்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் மீண்டும் அரிசி விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரிசி வகைகளுக்கு அரசாங்கம் விதித்திருந்த கட்டுப்பாட்டு விலை கடந்த மாதம் இரத்து செய்யப்பட்டதை அடுத்து அரிசியாலை உரிமையாளர்கள் அரிசி வகைகளின் விலைகளை அதிகரித்திருந்தனர்.

இந்த நிலையில் கீரி சம்பா கிலோ ஒன்றின் விலை 40 ரூபாவினாலும், சம்பா மற்றும் நாட்டரிசி விலை 15 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, சந்தையில் கீரி சம்பாவின் தற்போதைய விலை 210 ரூபாவாகவும், சம்பா அரிசி விலை 155 ரூபாவாகவும், நாட்டரிசி 130 ரூபாவாகவும் காணப்படுகின்றன.

இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் முதித்த பெரேரா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.     

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4