தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 71 பேர் கைது!

Reha
4 years ago
தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 71 பேர் கைது!

நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 71 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று காலை விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 81 ஆயிரத்து 311 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் மேல் மாகாணத்துக்கு உள்நுழையும் மற்றும் வெளியேறும் பிரதேசங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி 345 வாகனங்களில் வந்த 618 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4