குஷிநகரில் தரையிரங்கியது இலங்கையில் இருந்து சென்ற முதல் விமானம்!

Prabha Praneetha
4 years ago
குஷிநகரில் தரையிரங்கியது இலங்கையில் இருந்து சென்ற முதல் விமானம்!

இலங்கையில் இருந்து சென்ற முதல் விமானம் குஷிநகரில் தரையிரங்கியதையடுத்து, இந்தியாவின் புதிய சர்வதேச விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

குஷிநகர் விமான நிலைய திறப்பு – நாமல் உள்ளிட்ட குழுவினர் அடங்கிய முதல் விமானம் இந்தியாவுக்குப் பயணம்!

இந்தியாவின் குஷிநகர் சர்வதேச விமான நிலையம் இன்று பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

இதற்கான முதலாவது விமானம் இலங்கையிலிருந்து இன்று அதிகாலை 5.20 மணியளவில் புறப்பட்டுச் சென்றுள்ளது.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல் 1147 என்ற விமானமே இவ்வாறு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.

இந்த விமானத்தில், அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்கர் வெண்டருவே உபாலி தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தின் 95 பௌத்த தேரர்கள் சென்றுள்ளனர்.

அவர்களுடன் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தப் பயணத்தில் பங்கேற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4