மைத்திரி அணிக்கு மீண்டும் எச்சரிக்கை

Prabha Praneetha
4 years ago
  மைத்திரி அணிக்கு மீண்டும் எச்சரிக்கை


"ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசுக்குள் இருந்துகொண்டு சூழ்ச்சி செய்வதைவிட, வெளியேறி அரசியல் செய்யுங்கள்."

- இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க.

ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், விவசாயிகளின் போராட்டத்தின் பின்னணில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் செயற்படுகின்றது எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சுதந்திரக் கட்சியை அண்மைக்காலமாக கடுமையாக விமர்சித்துவரும் ரொஷான் ரணசிங்க, பல தடவைகள் வெளியே செல்லுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சு.கவின் சிரேஷ்ட உப தலைவர் நிமால் சிறிபாலடி சில்வா குறிப்பிட்டுள்ளார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4