பெயரை மாற்றுகிறதா பேஸ்புக்?.! விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Keerthi
4 years ago
பெயரை மாற்றுகிறதா பேஸ்புக்?.! விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பேஸ்புக் தனது நிறுவனத்தின் பெயரை மாற்ற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகின் பெரும்பாலானோர் பயன்படுத்தும் சமூகவலைதளங்களில் பேஸ்புக்கும் ஒன்று. ஆரம்பம் முதலே பேஸ்புக் மக்களிடம் வரவேற்பை பெரும் வரவேற்பை பெற்றது.

ஆனால், சமீபத்தில் பேஸ்புக் பல்வேறு சிக்கல்களில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது. குறிப்பாக அந்நிறுவனத்தின் செயல்பாடுகளால் அமெரிக்காவில் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.

இந்நிலையில், பேஸ்புக் தனது பெயரை மாற்ற போவதாகவும் இதற்கான அறிவிப்பை வருகின்ற 28 தேதி நடைபெற இருக்கும் பேஸ்புக்கின் வருடாந்திர கூட்டத்தில் அதன் சி. இ. ஒ மார்க் ஸக்கர்பர்க் வெளியிட கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேஸ்புக் புதிய பெயரில் ரீபிராண்டிங்க் செய்யப்படும் எனவும் அந்த நிறுவனத்தின் கீழ் அதனுடைய ஒரேயொரு மொபைல் ஆப்பில், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஓகலஸ் உள்ளிட்ட பிற புரோடக்ட்கள் கிடைக்கக் கூடும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த தகவல் குறித்து, பேஸ்புக் கூறுகையில் யூகங்களுக்கு பதில் கூற முடியாது என தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4