கர்ப்பிணிப் பெண்ணைக் கடித்துக் குதறிய கரடி

Prasu
4 years ago
கர்ப்பிணிப் பெண்ணைக் கடித்துக் குதறிய கரடி

கர்ப்பிணிப் பெண்ணைக்  கரடியொன்று கடித்துக் குதறும் வீடியோவொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரஷ்யாவில் நடைபெற்ற  சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்றிலேயே இச்சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

சர்க்கஸ் நிறுவனமொன்றில் பயிற்சியாளரான பணிபுரியும் குறித்த  கர்ப்பிணிப் பெண்ணினது கட்டளைகளுக்கு அமைவாக செயற்படும்  குறித்த கரடி சம்பவ தினத்தன்று திடீரென அவர் மீது பாய்ந்து தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் உடனடியாகச் செயற்பட்ட ஏனைய ஊழியர்கள் அக்கரடியிடம் இருந்து குறித்த பெண்ணைக் காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் ஆச்சரியப்படும் வகையில் அப்பெண்ணுக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் இல்லை எனவும்  அவரது வயிற்றில் இருந்த குழந்தைக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது அக் கரடி சர்க்கஸ் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4