மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களைப் பரிசோதிக்க நடவடிக்கை

#Police
Prathees
4 years ago
மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களைப் பரிசோதிக்க நடவடிக்கை

மாணவர்களை ஏற்றிச் செல்லும் வான் மற்றும் முச்சக்கர வண்டிகளை பரிசோதிக்கும் நடவடிக்கை இன்று (21) முதல் மேற்கொள்ளப்படவுள்ளது.

முச்சக்கர வண்டியில் இருவருக்கு மாத்திரமே பயணிக்க முடியும். இதேபோன்று வானில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பயணிக்க வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலான மாணவர்களை ஏற்றிச் செல்லும் வான் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த வாகனங்களில் பயணிக்கும் மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து இருப்பது அவசியமாகும். இதன்போது சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4