சமூக வலைதளங்களிலிருந்து விலகும் மஹிந்த தேசப்பிரிய

Prabha Praneetha
4 years ago
சமூக வலைதளங்களிலிருந்து விலகும்  மஹிந்த தேசப்பிரிய

சமூக ஊடக பாவனையில் இருந்து சிறிது காலத்திற்கு தாம் விலகியிருக்கத் தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய (Mahinda Deshapriya) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது முகப்புத்தக பக்க பதிவொன்றின் மூலம் அவர் இன்று இதனை கூறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று (16) தன் இடது கண்ணில் செய்துகொண்ட சத்திரசிகிச்சை காரணமாக மருத்துவர்களின் ஆலோசனையின் பிரகாரம் செயற்படுகின்றேன்.மீண்டும் ஒக்டோபர் 31 ஆம் திகதியே மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளவுள்ளேன்.

இதன் காரணமாக உங்களது பதிவுகளுக்கு கருத்து தெரிவிக்கவோ, பதிலளிக்கவோ முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4