பிரான்ஸில் நவம்பர் 15 சுகாதார அனுமதி நிறைவுக்கு வருமா?

#world_news #France
பிரான்ஸில் நவம்பர் 15 சுகாதார அனுமதி நிறைவுக்கு வருமா?

நவம்பர் 15 ஆம் திகதி சுகாதார அனுமதி அட்டை (pass sanitaire) நிறைவுக்கு கொண்டுவருவது எவ்வாறு என அரச ஊடக பேச்சாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று புதன்கிழமை பாராளுமன்ற அமர்வினை முடித்துக்கொண்டு ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அரச ஊடக பேச்சாளர் கேப்ரியல் அத்தால், கொரோனா நிலவரம் தொடர்பான பல தகவல்களை வெளியிட்டார். (இது தொடர்பாக நேற்றைய தினம் செய்திகள் வெளியிட்டிருந்தோம்.) அதில் அவர் மிக குறிப்பாக ‘பிரான்சின் அனைத்து மாகாணங்களில் வயது வரம்பின்றி கொரோனா வைரஸ் மீண்டும்’ வேகமாக பரவுகின்றது என தெரிவித்தார்.

இந்நிலையில், நவம்பர் 15 ஆம் திகதி வரை சுகாதார அனுமதி அட்டை கட்டாயமாக நடைமுறையில் இருக்கும் என முன்னதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று கேப்ரியல் அத்தால் தெரிவிக்கையில்.. “நவம்பர் 15 ஆம் திகதியுடன் pass sanitaire இனை எவ்வாறு முடிவுக்கு கொண்டுவருவது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

“கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ள நிலையில், எங்களுக்கு என ஒரு எதிர்க்கும் கருவி வேண்டும். அது pass sanitaire ஆக தான் இருக்கும். இந்த கருவி (pass sanitaire) நிரந்தரமாக இருக்கும் என நான் சொல்லவில்லை. ஆனால் நவம்பர் 15 ஆம் திகதியுடன் நிறைவுக்கு கொண்டுவருவது எவ்வாற்று என தெரியவில்லை!” என ஊடக பேச்சாளர் கேப்ரியல் அத்தால் வினாவினார்.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4