கம்பஹா தளபாட தொழிற்சாலையொன்றில் பாாிய தீ விபத்து

#Police
Prathees
4 years ago
கம்பஹா தளபாட தொழிற்சாலையொன்றில் பாாிய தீ விபத்து

கம்பஹா, அத்தனகல்ல - ஊராபொல பகுதியில் அமைந்துள்ள தளபாட உற்பத்தி தொழிற்சாலை ஒன்றின் களஞ்சியசாலையில் பாரிய தீ ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 2 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட குறித்த களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயினால் அங்குக் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கதிரைகள் (சோஃபா) தீக்கிரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு சம்பவ இடத்துக்குத் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4