சுவிஸ்மெடிக்கின் பரிந்துரைக்காக காத்திருக்கும் சுவிற்சலாந்து மக்கள்.

#world_news #Switzerland
சுவிஸ்மெடிக்கின் பரிந்துரைக்காக  காத்திருக்கும் சுவிற்சலாந்து மக்கள்.

சுவிற்சலாந்தில் ஒக்டோபர் 19ம்திகதி நடந்து முடிந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்காரணமாக வைத்தயசாலையில் 388 பேரும் அதில் தீவர சிகிச்சை பிரிவில் 109 பேரும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அத்துடன் ஒக்டோபர் 20ம் திகதி கொவிட் தொற்றுக்காரணமாக 3 பேர் இறந்தனர்.

சுவிற்சலாந்து அதிகாரிகள் தடுப்பூசி மூலோபாயத்தின் அடுத்த படிகளில் இறங்குவதற்கு முன் நாட்டின் மருத்துவ கட்டுப்பாட்டாளர் கொவிட் பூஸ்டர் ஷாட்கள் குறித்து தனது கருத்தை தெரிவிக்கும் பொருட்டு காத்திருக்கிறார்கள்.

வியாழக்கிழமை சுவிஸ் சுகாதார அமைச்சர் அலைன் பெர்சட், தடுப்பூசியின் முன்றாவது டோஸின் பரிந்துரையை சுவிஸ்மெடிக்கிடம் இருந்து அரசாங்கமும் கன்டோன்களும் பெற்றுக்கொள்ள காத்திருப்பதாக கூறினார்.

நாங்கள் மத்திய தடுப்பூசி ஆணையம் மற்றும் கன்டோன்களுடன் வழமையைான பரிமாற்றங்களை கொண்டுள்ளோம், தற்போது சுவிஸ் மெடிக்கின் முடிவுக்காக காத்திருக்கிறோம் என்று பெர்செட் கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4