நுவரெலியா மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பம்

Prabha Praneetha
4 years ago
நுவரெலியா மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பம்

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு முதல் தடவையாக பைசர் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்திற்கமைய இன்று (22) பல சுகாதார பிரிவுகளில் உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தடுப்பூசிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன.

கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவில் மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசிகள் வழங்கும் வேலைத்திட்டம் கொட்டகலை பிரதேச வைத்திய அதிகாரி கே.சுதர்சன் தலைமையில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று (22) காலை 6.00 மணி தொடக்கம் பகல் 12 வரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தன.

இதில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம், கேம்பிரிஜ், யதன்சைட், திம்புல்ல, ஸ்டோனிகிளிப் ஆகிய ஐந்து பாடசாலைகள் 12 மற்றும் 13 ஆகிய வகுப்புக்களில் கல்வி பயிலும் 900 மாணவர்களுக்கும்.
தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தமிழ் வித்தியாலயம், சுமன சிங்கள மகா வித்தியாலயம், வட்டகொட தமிழ் மகா வித்தியாலயம், கிரேட்வெஸ்ட்டன் , பாரதி தமிழ் வித்தியாலயங்களில் கல்வி பயிலும் சுமார் 700 மாணவர்களுக்கும் இன்று தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதாக பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.சுதர்சன் தெரிவித்தார்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4