திருகோணமலையில் கனிஷ்ட பிரிவு பாடசாலைகள் நாளை ஆரம்பம் (Photos)

Reha
2 years ago
திருகோணமலையில் கனிஷ்ட பிரிவு பாடசாலைகள் நாளை ஆரம்பம் (Photos)

நாட்டில் உள்ள அனைத்து கனிஷ்ட பிரிவு பாடசாலைகளும் நாளை திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது இவ்வாறு சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் முதல்கட்டமாக கடந்த  21ஆம் திகதி ஆரம்பமானது

இரண்டாம் கட்டமாக 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகள் நாளை (25) ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்  40க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொண்ட வகுப்புகளை நடத்தும் போது மாணவர்களை பகுதி பகுதியாக அழைத்து கற்றல் நடவடிக்கைகளை  மேற்கொள்வதற்கு பாடசாலையின் அதிபர்களுக்கு முழுமையான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும்  விரைவில் முழுமையாக வகுப்புகள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்

அதனடிப்படையில் திருகோணமலை ஸாஹிரா தேசிய பாடசாலையில் நாளை பாடசாலை ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டத்தின் ஆரம்ப கட்டமாக கல்லூரியின் அதிபர் ஏ.எஸ்.அலி சப்ரி அவர்களின் வழிகாட்டலில் ஆரம்ப பிரிவு அதிபர் மர்லியா சக்காப் அவர்களின் தலைமையில் சிரமதான நிகழ்வு இன்று இடம்பெற்றது

இந்நிகழ்வில் மாணவர்கள் கை கழுவுவதற்கான வசதி,வகுப்பறையில் மாணவர்கள் சமூக இடைவெளியுடன் இருப்பதற்கான ஏற்றப்பாடுகள் என்பன ஆராய பட்டத்துடன் வகுப்பறைகளும் சுத்தம் செய்யப்பட்டது.

இவ் சிரமதான நிகழ்வில் கல்லூரின் அதிபர் ஏ.எஸ்.அலி சப்ரி,ஆரம்ப பிரிவு அதிபர் மர்லியா சக்காப், வகுப்பாசிரியர்கள்  மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டதுடன் மாணவர்களுக்கு சீருடை கட்டாயம் இல்லை எனவும் சாதரண உடையில் பாடசாலைக்கு சமூகமளிக்க முடியுமெனவும் மாணவர்களுக்கு காய்ச்சல்,தடிமன்,இருமல் போன்ற ஏதேனும் நோய்கள் காணப்படுமே ஆனான் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் மாணவர்களின் நோய் தொடர்பில் வகுப்பாசிரியர்களுக்கு தெரியப்படுத்துமாறும் கனிஷ்ட பிரிவு அதிபர் மர்லியா அவர்களினால் பெற்றோர்களுக்கு ஆலோசனையும் வழங்கபட்டது.

மேலும் திருகோணமலை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளினால் கல்லூரி மேற்ப்பார்வையிடப்பட்டு டெங்கு நோய் பரவாமல் இருக்க கல்லூரி வளாகம் மற்றும் வகுப்பறைகளுக்கு டெங்கு புகை விசிறப்பட்ட்டதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!