நாவூற வைக்கும் இறால் ஊறுகாய்

Prabha Praneetha
3 years ago
நாவூற வைக்கும் இறால் ஊறுகாய்

தேவையான பொருட்கள்

இறால் - கால் கிலோ

இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

நல்லெண்ணெய் - 200 கிராம்

வினிகர் - 1/2 கப்

உப்பு - 1 தேக்கரண்டி

வறுத்து பொடிக்க

கடுகு - 1 ஸ்பூன்

சோம்பு - 1 ஸ்பூன்

வெந்தயம் - 1/2 ஸ்பூன்

செய்முறை

முதலில் இறாலை சுத்தமாக கழுவி கொள்ளவும். நன்றாக கழுவிய இறாலில் கொஞ்சம் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது போட்டு பிசறி அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

ஒரு கடாயில் பாதி எண்ணெய் விட்டு காய்ந்ததும் இறலை போட்டு நன்கு சிவக்க பொறித்து எடுத்து ஆற வைக்கவும்.

இறாலை பொரித்த எண்ணெயுடன் மீதி எண்ணெயை ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

அடுத்து பொரித்த இறால் மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு 5 நிமிடம் கிளறி விடவும். பின்பு அதில் வினிகர், உப்பு சேர்த்து இறக்கி விடவும்.

கடைசியாக அதன் மேல் வறுத்து பொடித்த பொடியை போட்டு நன்றாக கிளறி ஆற வைத்து பாட்டிலில் போட்டு வைக்கவும். ஊறுகாய்க்கு மேலே 1 இஞ்ச் உயரத்திற்கு எண்ணெய் இருக்க வேண்டும்.

பாட்டிலின் வாயை வெள்ளை துணியால் மூடி மூன்று நாள் கழித்து உபயோகப்படுத்தலாம். உப்பு காரம், புளிப்பு போன்றவை அவரவர் ருசிக்கேற்ப்ப சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த ஊறுகாய் 2 மாதம் வரை கெடாமல் இருக்கும். சூப்பரான இறால் ஊறுகாய் ரெடி.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!