யாழ். அரசி மா பிட்டு செய்யும் முறை

#Cooking #Jaffna
யாழ். அரசி மா பிட்டு செய்யும் முறை

தேவையான பொருட்கள்

  • அவித்த வெள்ளை மா - 1 சுண்டு
  • சிவப்பு அரிசி மா  - 1/4 சுண்டு
  • உப்பு - 1 தே.கரண்டி
  • தேங்காய்ப் பூ - 2 கைப்பிடியளவு
  • கொதி நீர் - தே.அளவு

செய்முறை :-

  • வெள்ளை மா, அரிசிமா , உப்பு மூன்றையும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
  • நன்றாகக் கொதிக்கும் தண்ணீரை சிறிது சிறிதாக விட்டு ஒரு அகப்பை தடியால் கிண்டிக் கொள்ளவும். மா தண்ணீருடன் கலந்து திரண்டு வரும் வரை கிண்டிக் கலக்கவும்.
  • அந்த மாக் கலவையை சுளகில் அல்லது தட்டில் கொட்டி கையால் பிசைந்து, விரல்களால் உதிர்த்துக் கொள்ளவும்.
  • அதனை ஒரு வெட்டும் தம்ளரால் கொத்தவும். (குறுணியாக கொத்திக் கொள்ளவும்)
  •  பின்னர் தேங்காய்ப் பூ கலந்து நீத்துப் பெட்டியில் போட்டு ஆவியில் அவித்து எடுக்கவும்.

குழல் புட்டுக்கு தேங்காய்ப் பூ கலக்காமல், குழலில் முதல் சிறிது தேங்காய்ப் பூ , பின்பு புட்டுக்கலவை,தேங்காய் பூ என மாறி மாறிப் போட்டு அவிக்கவும்.

அரிசி மாவிற்கு பதிலாக குரக்கன் மா, உழுத்தம்மா, ஆட்டா மா சேர்த்தும் அவிக்கலாம்.
 

குறிப்பு : சம்பல், சொதி, பொரியலுடன் சாப்பிட ஏதுவான உணவு.. யாழ்ப்பாண மக்களின் அன்றாட இரவுச் சாப்பாடு இது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!