8 மாதங்களுக்குத் தேவையான டீசல் மற்றும் பெட்ரோல் நாட்டிற்கு இறக்குமதி

Prabha Praneetha
2 years ago
 8 மாதங்களுக்குத் தேவையான டீசல் மற்றும் பெட்ரோல் நாட்டிற்கு இறக்குமதி

அடுத்த வருட ஆரம்ப பகுதியில் இருந்து 8 மாதங்களுக்குத் தேவையான டீசல் மற்றும் பெட்ரோலை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு தேவையான கொள்முதல் நடவடிக்கைக்கான அமைச்சரவைப் பத்திரத்தை எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ளார்.

இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என நாட்டு மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சம் நிலவுவதாகவும், தற்போது நாட்டில் அவ்வாறான எரிபொருள் தட்டுப்பாடொன்று இல்லை எனவும், எதிர்காலத்தில் அவ்வாறானதொரு தட்டுப்பாடு ஏற்பட அரசாங்கம் இடமளிக்காது எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் Vichol Asia Pvt. Ltd இன் கொள்முதல் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும், திறந்த சந்தைப் பொருளாதார முறையொன்று செயற்படும் நாட்டில், வழங்கல் மற்றும் தேவைக்கேற்ப விலைகள் நிர்ணயிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

அண்மைக் காலங்களில், இலங்கையின் பொருளாதாரத்தில், விநியோகம் தொடர்பாக சில தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன, தொற்றுநோய் பரவல் காரணமாக உற்பத்தி சரிவு, விநியோக சீர்குலைவுகள் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி, உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு போன்ற அனைத்து காரணிகளாலும் இறக்குமதி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!