வடக்கு, கிழக்கு விவசாயிகள் சேதன பச‍ளை விவசாயத்துக்கு அஞ்சமாட்டார்கள் -  சஷீந்திர ராஜபக்ஷ 

#SriLanka #NorthernProvince
வடக்கு, கிழக்கு விவசாயிகள் சேதன பச‍ளை விவசாயத்துக்கு அஞ்சமாட்டார்கள் -  சஷீந்திர ராஜபக்ஷ 

வடக்கு மற்றும் கிழக்கு விவசாயிகள் சேதன பச‍ளை மூலமான விவசாயத்துக்கு அஞ்ச மாட்டார்கள். அவர்கள், யுத்தம் நிலவிய  30 வருட காலப் பகுதியிலும்கூட சேதன பசளை விவசாயத்தை மேற்கொண்டிருந்தனர். 

சேதன பசளை விவசாயத்துக்கு இடைத்தரகர்களாக ஈடுபடும் விவசாயிகளே அஞ்சுகின்றனர் என  விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.
அத்துடன், எமது நாட்டில் வைத்தியசாலைகளின் எண்ணிக்கையை குறைப்பதே எனது நோக்கம். குறிப்பாக  நாட்டில் காணப்படும் சிறுநீரக வைத்தியசாலைகளில் ஒன்றையேனும் மூடச் செய்வதே எனது  தனிப்பட்ட கருத்து. 

அதற்கு, எமது நாட்டு மக்கள் சுகதேகிகளாக மாற வேண்டும். இதற்கு பிரதானமானது சுத்தமானதும், சுகாதாரமும் உடைய உணவு பழக்கமாகும். சேதன பசளை விவசாயத்தை 100 வீதம் செய்யும் உலகின் முதல் நாடாக இலங்கையை மாற்றுவதே எமது நோக்கம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் சேத‍ன பசளை உற்பத்திக்காக போலாந்தின்  ரெஜினா பேர்ப்புரியா பண்டுஸ் மூலதன நிறுனம் 12.8  பில்லியன் ரூபா முதலீட்டுக்கான முன்மொழிவை கொலம்போ கொமர்ஷல் பேர்டிலைசர்ஸ் லிமிட்டெட் நிறுவனத்துடனான புரிந்துணர்வு  ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (26) காலை கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷவின் முன்னிலையில் நடைபெற்றது.  

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர்  எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

"நாம் சுகாதாரமான உணவுப் பழக்கத்துக்கு  எம்மை மாற்றிக்‍ கொள்ள வேண்டும். அதற்கு எமது நிலங்களை சேதன பசளை மூலமான விவசாயத்துக்கு மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியமாகும். இதனை செய்வதற்கு மூன்று, நான்கு ஆண்டுகள் எடுக்கும். 

ஆகவே, நாம் தற்போது பயணத்தை நடுவில் இருக்கிறோம். ஒரேயடியாக முன்னேற்றத்தை காண முடியாது. எமது  அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட இந்த 100 வீத சேதன பசளை விவசாயத் திட்டத்தை வேறு அராசங்கம் வந்து நிறுத்திவிடாது. இந்த திட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த வேண்டும். 

எம்மால் முடியாது என்பதை  மற்றவர் கூறுவதை செய்வது பெரும் சவாலாகும். அவ்வாறு முடியாது என்று கூறிய பலவற்றை எமது அரசாங்கம் முன்னர் செய்து காட்டியுள்ள‍தைப் போலவே, தற்போதும் செய்துசெய்து காட்டுவேம். 

உள்நாட்டு யுத்தததை முடிவுக்கு கொண்டு வர முடியாது என கூறினார்கள். ஆனால், நாம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம்.  

அதுபோலவே, 100 வீதமான சேதன பசளை விவசாயத்தை நாட்டில்  மேற்கொள்வதற்கான திட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொண்டுவந்தார். ஆகவே, கஷ்டம் மற்றும் முடியாது என கூறுகின்ற விடயங்களை செய்வதே எமது ‍ இலக்கு என அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!