WCT20 2021 - பங்களாதேஷை வீழ்த்திய இங்கிலாந்து அணி

இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற ரி20 உலகக்கிண்ண சூப்பர் 12 சுற்று போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இலகு வெற்றியை பதிவு செய்துள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அவ்வணி சார்பில் முஷ்பிகுர் ரஹீம் 29 ஓட்டங்களையும் மொஹமதுல்லாஹ் 19 ஒட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.
நஷூம் அஹமட் ஆட்டமிழக்காமல் 19 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் டைமல் மில்ஸ் மூன்று விக்கெட்டுக்களை அதிக பட்சமாக வீழ்த்தினார்.
பதிலுக்கு 125 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 14.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்று வெற்றிப் பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பில் ஜேசன் ரோய் 60 ஓட்டங்களைப் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
டேவின் மாலன் ஆட்டமிழக்காது 28 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 18 ஒட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.



