கொவிட் தடுப்பு விஷேட குழு கூட்டம் இன்று

Prabha Praneetha
4 years ago
கொவிட் தடுப்பு விஷேட குழு கூட்டம் இன்று

கொவிட் தடுப்பு விஷேட குழு இன்று (29) கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இந்த குழு கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாட்டை 31 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்க இதற்கு முன்னர் கூடிய கொவிட் தடுப்பு விஷேட குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாறு போக்குவர்த்து கட்டுப்பாடு நீக்கப்பட்டதன் பின்னர் பேருந்துகள் மற்றும் புகையிரதங்களின் பயணங்கள் தொடர்பில் இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4