மரண தண்டனை தீர்ப்புக்கு மத்தியில் தாயகம் திரும்பும் வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா

#PrimeMinister #Women #Country #Lanka4 #Bangladesh #L4
Prasu
1 hour ago
மரண தண்டனை தீர்ப்புக்கு மத்தியில் தாயகம் திரும்பும் வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா

ஆகஸ்ட் 2024 முதல் இந்தியாவில் வசித்து வரும் வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்த ஆண்டு தனது நாட்டிற்குத் திரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வங்கதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, ஹசீனா கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக புது தில்லியில் தஞ்சம் கோரியிருந்தார்.

நேர்காணல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், 78 வயதான ஹசீனா தனது வங்கதேசம் திரும்புவது, அந்நாட்டு மக்களின் உரிமைகளுக்காகவும், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் விடுதலைப் போரின் உணர்வை மீட்டெடுப்பதற்காகவும் என்று குறிப்பிட்டுள்ளார்.

"நான் அதிகாரத்திற்காக அரசியல் செய்வதில்லை. நான் பங்களாதேஷ் மக்களின் நலனுக்காகவும், 'சோனார் பங்களா'வை உருவாக்கும் தேசத்தந்தை பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் கனவை நிறைவேற்றுவதற்காகவும் அரசியல் செய்கிறேன்," என்று நாட்டின் உருவாக்கத்தில் தனது தந்தையின் பங்கைக் குறிப்பிட்டு ஹசீனா அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4