உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் தற்போதைய அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர் - தேரர் குற்றச்சாட்டு

Reha
2 years ago
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் தற்போதைய அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர் - தேரர் குற்றச்சாட்டு

உயிரித்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் கடந்த அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் மட்டுல்ல தற்போதைய அரசாங்கத்தை சேர்ந்தவர்களும் உள்ளதாக பாஹிங்கல ஆனந்த சாகர தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

கொடூரமான முறையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் பல அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளும் உள்ளனர்.

நாட்டிற்குள் இது தொடர்பான நியாயமான விசாரணைகள் நடக்கவில்லை எனில், சர்வதேசத்திற்கு சென்று நியாயத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவளிக்கப்படும்.

மேலும்  இது குறித்து சர்வதேச பௌத்த தலைவர்களுக்கு எதிர்காலத்தில் தெளிவுப்படுத்தலை ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!