நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை தொடரும்!

#weather #SriLanka
Prathees
4 years ago
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை தொடரும்!

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு முதல் மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது கிழக்கு முதல் வடகிழக்கு வரையான திசைகளிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

முல்லைத்தீவிலிருந்து காங்கேசந்துறை ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். 

பொதுமக்கள் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4