ருஹுணு பல்கலைக்கழகத்தில் 38 மாணவர்களுக்கு கொரோனா

#Covid 19 #Corona Virus
Prathees
4 years ago
ருஹுணு பல்கலைக்கழகத்தில் 38 மாணவர்களுக்கு கொரோனா

கம்புருபிட்டிய, ருஹுனுகமவில் உள்ள ருஹுணு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட மாணவர்கள் 38 பேருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கம்புருபிட்டிய நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் அஞ்சன கல்படஹேவா தெரிவித்தார்.

கோவிட் 19 நோயால் கண்டறியப்பட்ட மாணவர்களை மற்ற மாணவர்களிடமிருந்து பிரித்து விடுதியில் தங்க வைக்க பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

25 மற்றும் 26 ஆம் திகதிகளில், இந்த மாணவர்களுக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதேவேளை, கம்புருபிட்டியவில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 6 பெண் ஊழியர்கள் உட்பட அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 27ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அனிடிஜன் பரிசோதனையின் மூலம் இந்த தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4