ராஜபக்ச அரசுக்கு கைகொடுத்த சீனா இப்போது கன்னத்தில் அறைகின்றது! - ஐ.தே.க. தெரிவிப்பு

Prasu
4 years ago
ராஜபக்ச அரசுக்கு கைகொடுத்த சீனா இப்போது கன்னத்தில் அறைகின்றது! - ஐ.தே.க. தெரிவிப்பு

ராஜபக்‌ஷக்கள் ஆட்சிக்கு வருவதற்கு கைகொடுத்த சீனா, இப்போது அவர்களின் கன்னத்தில் அறைய ஆரம்பித்துள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இலங்கை அரச வங்கியான மக்கள் வங்கி, சீனத் தூதரகத்தால் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலேயே பாலித ரங்கேபண்டார எம்.பி. இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த அரசைக் கொண்டுவருவதற்காக சீனாவின் ஒத்துழைப்பை வழங்கியதுடன், அதற்கு பிரதி உபகாரமாக இலங்கையில் தமக்குத் தேவையான இடங்களைப் பெற்றுக்கொள்ள அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தற்போது சீனத் தூதரகம் மக்கள் வங்கியைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்தமையானது சீன அரசு அல்லது சர்வதேசம், ராஜபக்‌ஷ அரசாங்கத்தை கறுப்புப் பட்டியல் சேர்ப்பதற்கு சமமானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4