கட்சித் தலைமைக் கூட்டத்தில் ஞானசார தேரரின் நியமனம் தொடர்பில் கருத்து முரண்பாடுகள்

#Gotabaya Rajapaksa #Meeting #Colombo
Prathees
2 years ago
கட்சித் தலைமைக் கூட்டத்தில் ஞானசார தேரரின் நியமனம் தொடர்பில் கருத்து முரண்பாடுகள்

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் தொடர்பான அமைச்சரவை பத்திரத்தில் அவதானிப்புகளை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அரசாங்கத்தின் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 

ஏனெனில் இந்த ஒப்பந்தம் அமெரிக்க நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாகவும்   அதன் குறைபாடுகளை சரிசெய்ய அந்த நிறுவனம் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

யுகதானவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் நேற்று (28) அலரிமாளிகைக்கு வருகை தந்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோர் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் பலரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 05.30 மணியளவில் ஆரம்பமான கலந்துரையாடல் சுமார் 4 மணித்தியாலங்கள் நீடித்துள்ளது.

அமெரிக்க நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் குறைபாடுகள் மற்றும் பலவீனங்கள் குறித்து எழுத்து மூலம் சுட்டிக்காட்டப்பட வேண்டும் எனவும் அதனடிப்படையில் உரிய குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியும் எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

மேலும் “ஒரே நாடு ஒரே சட்டம்” அமைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் தலைவராக வண.கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமையும் இந்தக் கலந்துரையாடலின்போது கருத்து முரண்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!