தெமட்டகொட ருவன் ஒரு கிலோ தங்கத்துடன் புலனாய்வுப் பிரிவினரால் கைது

#Arrest #Colombo
Prathees
4 years ago
தெமட்டகொட ருவன்  ஒரு கிலோ தங்கத்துடன் புலனாய்வுப் பிரிவினரால் கைது

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான தெமட்டகொட சமிந்தவின் சகோதரரான தெமட்டகொட ருவன் என அழைக்கப்படும் ருவன் சமில பிரசன்ன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.

பணமோசடி சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

இச்சோதனையின் போது அவரிடமிருந்த 04 சொகுசு கார்கள் மற்றும் ஒன்றரை கிலோ தங்கத்தையும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

ஏப்ரல் 10 ஆம் திகதி, இந்திய கடலோரக் காவல்படையினர் இந்தியக் கடற்கரையில் சுமார் 300 கிலோகிராம் ஹெராயின் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஹெரோயின் போதைப்பொருள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது தெரியவந்துள்ளது.

இலங்கையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு இந்திய அதிகாரிகள் தகவல் தெரிவித்ததை அடுத்து அவர்கள் நாட்டில் பலரை கைது செய்து  விசாரித்தனர்.

சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

போதைப்பொருள் தெமட்டகொட ருவனிடத்திற்கு கொண்டு வரப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இன்று காலை தெமட்டகொட ருவனின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

அதாவது சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தில் பணம் சம்பாதித்த குற்றச்சாட்டின் கீழ் அவரையும் அவரது சொத்துக்களையும் பணமோசடி சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் புலனாய்வு பிரிவினர் அங்கு சென்றனர்.

அவரது வீட்டில் இருந்து ரேஞ்ச் ரோவர், பிராடோ மற்றும் இரண்டு புத்தம் புதிய பிஎம்டபிள்யூ கார்களை பொலிசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் வீட்டில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ தங்கத்தையும் பொலிசார் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெமட்டகொட ருவன் நாளை கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4