‘மைக்ரோசிப்’ பற்றாக்குறை காரணமாக கார், செல்போன் தயாரிப்பில் பாதிப்பு

Keerthi
4 years ago
‘மைக்ரோசிப்’ பற்றாக்குறை காரணமாக கார், செல்போன் தயாரிப்பில் பாதிப்பு

தற்போதைய எலக்ட்ரானிக் யுகத்தில் கார்கள் முதல் செல்போன்கள் வரை அனைத்து பொருட்களின் இயக்கத்திலும் ‘மைக்ரோசிப்’ எனப்படும் மின்னணு கருவி மிக முக்கிய பங்காற்றுகிறது. இந்த மைக்ரோசிப்களின் தேவைக்கு இந்திய நிறுவனங்கள் பெரும்பாலும் வெளிநாட்டு இறக்குமதியை நம்பியுள்ளன. 

அதிலும் குறிப்பாக தைவான், சீனா, ஹாங்காங் ஆகிய நாடுகள் சிப்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னனியில் உள்ளன. இதற்கிடையில் கொரோனா ஊரடங்கின் காரணமாகவும், தைவானில் ஏற்பட்ட வறட்சி காரணமாகவும் கடந்த ஒரு ஆண்டாக சிப்கள் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் சிப்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக முன்னனி கார் தயாரிப்பு நிறுவனங்களின் நிகர லாபம் வெகுவாக சரிந்துள்ளது. மைக்ரோசிப் உற்பத்தியில் முன்னனியில் உள்ள குவால்காம், இன்டெல் ஆகிய நிறுவனங்கள் அடுத்த 4 மாதங்கள் முதல் ஒரு ஆண்டு வரை சிப்களின் பற்றாக்குறை தொடரும் என்று கூறியுள்ளன. 

சில வகையான சிப்களுக்கு அடுத்த 2 ஆண்டுகள் வரை தட்டுப்பாடுகள் தொடர வாய்ப்புள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும் 4ஜி ரக செல்போன்களுக்குள் பொருத்தப்படும் சிப்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், இவற்றின் உற்பத்தியும் உலகெங்கும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4