பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனக் கூறி ஒரு லட்சம் ருபாய் கப்பம் பெற்ற மூவர் கைது

#Arrest #Police
Prathees
2 years ago
பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனக் கூறி ஒரு லட்சம் ருபாய் கப்பம் பெற்ற மூவர் கைது

பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனக் கூறி கிராண்ட்பாஸ் - மொலவத்தை பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரை வாகனத்தில் கடத்திச் சென்று 100,000 ரூபா கப்பம் பெற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கடத்தல் சம்பவம் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் கடத்தப்பட்ட நபரை மாபோலயிலுள்ள வீடொன்றில் தடுத்து வைத்து 100,000 ரூபா பணம் கேட்டுள்ளதுடன் பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டாம் என வீட்டாரை அச்சுறுத்தியுள்ளனர்.

கடத்தப்பட்ட நபரின் மனைவி பின்னர் அவர்கள் குறிப்பிட்ட தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 100இ000 ரூபாவை வைப்பிலிட்டுள்ளார்.

அதன்பின்னர் கடத்திச்சென்றவருக்கு ரூ.1,000 ருபாயைக் கொடுத்து  அவரை மாபோல பகுதியில் உள்ள வீதியில் கொண்டு வந்து விட்டு சென்றுள்ளனர்.

பின்னர் அந்த நபர் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்காமல் வீடு திரும்பி உள்ளார்.

நேற்று (29) கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் குறித்த சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் பிரதான சந்தேக நபரையும் மேலும் இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் 28, 35 மற்றும் 44 வயதுடைய வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

சந்தேகநபர்கள் இன்று (30) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!