அனுராதபுரத்தில் கொவிட் கொத்தணி

#Anuradapura #Covid 19
Prasu
2 years ago
அனுராதபுரத்தில் கொவிட் கொத்தணி

கடந்த வாரத்தில் அனுராதபுரம் மாவட்டத்தினுள் கொவிட் தொற்றாளர்கள் பதிவாவது அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

அனுராதபுர மாவட்ட தொற்று நோய் நிபுணர் ஆர்.எம்.ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 5 நாட்களில் மாத்திரம் மாவட்டத்தில் 650 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அனுராதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் சிலரும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சுமார் மூன்று மாதக்காலமாக கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த இந்துருவ சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பிரசாத் டி சில்வா நேற்று உயிரிழந்தார்.

சடலம் இரண்டு மணித்தியாலங்கள் அவர்களது வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரின் குடும்ப உறுப்பினர்கள் மாத்திரமே இறுதிக் கிரியைகளில் கலந்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!