பிரித்தானிய இராஜாங்கச் செயலாளரை சந்தித்து என்ன பேசினார் பீரிஸ்?

#G. L. Peiris #UnitedKingdom
Prathees
2 years ago
பிரித்தானிய இராஜாங்கச் செயலாளரை சந்தித்து என்ன பேசினார் பீரிஸ்?

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான பிரித்தானிய இராஜாங்கச் செயலாளர் எலிசபெத் ட்ரஸ்ஸை அண்மையில் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தைச் சந்தித்தார்.

தகுதியான சனத்தொகையில் சுமார் 82% பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதன் மூலம், இலங்கையில் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் வெளிவிவகார செயலாளர் எலிசபெத் ட்ரஸிடம் தெரிவித்தார்.

தொற்றுநோய்களின் போது வீழ்ச்சியடைந்த சுற்றுலா துறை தற்போது  உயர்ந்து வருவதாகவும் மற்ற வணிகங்களும் வளர்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

இலங்கையின் அரசியல், வர்த்தகம், நிதி, சட்டம் மற்றும் கல்வி என ஒவ்வொரு அம்சத்திலும் பிரித்தானிய செல்வாக்கு காணப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

புலம்பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஊக்குவித்துள்ளதாகவும், அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அணுகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் போன்ற அலுவலகங்கள் பயனுள்ள பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு விஜயம் செய்தமை அதிர்ஷ்டம் எனவும்  இரு நாடுகளும் முதலீடுகளில் அதிகம் ஈடுபட வேண்டும் எனவும்  வெளிவிவகார செயலாளர் எலிசபெத் ட்ரஸ் இதன்போது தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!