மக்கள் ஏன் தேவையில்லாமல் கொல்லப்பட்டார்கள்? கர்தினால்

#Malcolm Ranjith #Easter Sunday Attack
Prathees
2 years ago
மக்கள் ஏன் தேவையில்லாமல் கொல்லப்பட்டார்கள்? கர்தினால்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு நீதி வழங்குவது யாராலும் கிடைத்த பரிசு அல்ல, மக்களின் உரிமை என பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நேற்று (30) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நேற்று கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில்  New Mission house திறப்பு விழா பேராயர் மல்கம் ரஞ்சித் தலைமையில் நடைபெற்றது.

அங்கு உரையாற்றிய பேராயர்,

நாங்கள் எப்பொழுதும் அதையே கூறுகிறோம். இவர்கள் கண்மூடித்தனமாக கொல்லப்பட்டதற்கான காரணங்களை நாம் அறிய வேண்டும்.

அது எங்களின் உரிமை. இது யாருடைய பரிசும் அல்ல.

எனவேஇ ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ள முழு கதையையும் வெளிக்கொணர இந்த நாட்டின் தலைவர்களை நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம் என்பதை இந்த நாட்டின் தலைவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.

நாங்கள் நீதியை நிலைநாட்ட விரும்புகிறோம். அதைத்தான் எதிர்பார்க்கிறோம். நிறைய பணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நாங்கள் எதிர்பார்க்கும் நீதியை நிறைவேற்றுங்கள் என அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!