ஞானசார தேரரை நியமித்தமை எதற்காக? ஜனாதிபதி வெளியிட்ட கருத்து

#Gotabaya Rajapaksa #Gnanasara Thero
Prathees
2 years ago
ஞானசார தேரரை நியமித்தமை எதற்காக? ஜனாதிபதி வெளியிட்ட கருத்து

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமை நாட்டுக்காக சட்டம் இயற்றுவதற்காக அல்ல, தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக  என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடலின்  போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவுக்கு தாம் விரும்பிய நபரை நியமிக்கும் திறன் உள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தாம் கூறுவது, செய்வது என அனைத்திற்கும் ஆலோசனைக்காக கட்சித் தலைவர்களிடம் சென்றால், நண்பர்களுடன் பழகுவதற்கு அவர்களிடம் அனுமதி பெற வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அலி சப்ரி நீதியமைச்சராக நியமிக்கப்பட்ட போதும் இவ்வாறான போராட்டங்கள் இடம்பெற்றதாகவும், ஆனால் தற்போது சப்ரி அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் சேவையாற்றுவதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!