2020ம் ஆண்டில் 68 ஆயிரம் ருபாவிற்கு சீஸ் சாப்பிட்டாரா ரோஸி? பொலிஸில் முறைப்பாடு

#Complaint
Prathees
2 years ago
2020ம் ஆண்டில் 68 ஆயிரம் ருபாவிற்கு சீஸ் சாப்பிட்டாரா ரோஸி? பொலிஸில் முறைப்பாடு

தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் 14 குளிரூட்டிகளை பொருத்தியமை, பால் மாஇ சீஸ், உலர் உணவு மற்றும் தனிப்பட்ட ஊழியர்களின் சம்பளம் போன்றவற்றிற்காக பொதுப் பணத்தை செலவிட்டதாக கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில்  ரோசி சேனாநாயக்க சீஸ் வாங்குவதற்காக மட்டும் ரூ.68,000 மற்றும் சிற்றுண்டிகளுக்கு ரூ.250,000 செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மகிந்த கஹந்தகம செலவுகள் தொடர்பான  தகவல்களை பெற்றுக்கொண்ட பின்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் தொற்று நோய் பரவலுக்கு மத்தியில் மக்கள் அவதியுறும் வேளையில் பொது நிதியை தவறாக பயன்படுத்தியமை குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கஹந்தகம தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!