திருகோணமலையில் கைதான நபருக்கு பாதாள உலக  குழுவுடன் தொடர்பா?

#Police #Trincomalee
Prathees
4 years ago
திருகோணமலையில் கைதான நபருக்கு பாதாள உலக  குழுவுடன் தொடர்பா?

கைகுண்டு மற்றும் வாளுடன் திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு பகுதியில் நபர் ஒருவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு கைது செய்யப்பட்ட குறித்த நபரிடம் இருந்து கைகுண்டு ஒன்றும் மூன்றடி நீளமாள வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.  

குறித்த நபர் பாதாள உலக கோஷ்டியுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர் சென்ற மாதம் குறித்த பிரதேசத்தில் இடம்பெற்ற கற்பழிப்பு சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என தெரிவித்த பொலிஸார் உப்புவெளி-தேவா நகர் பிரதேசத்தில் இடம்பெறும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்பு பட்டவர் எனவும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவரையும் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களையும் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4